வேறொரு பூமியில் இருந்து வந்திருக்கிறேன்... நிர்வாணமாக நடந்த நபரால் பரபரப்பு!

 
Florida

அமெரிக்காவில் கடை தெருவில் ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில் சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பாம் பீச் பகுதியில் பாலியல் பொம்மைகள், பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் வழியே நபர் ஒருவர் உடலில் ஆடைகள் எதுவுமின்றி நடந்து சென்றார். இதனை கவனித்த அந்த கடையின் ஊழியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். 

Jason Smith

பொதுவெளியில் ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில் அந்த நபர் அந்தரங்க பாகங்களை காட்டியபடி நடந்து சென்றுள்ளார். இதனால், பலரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அந்நபரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அதற்கு அந்த நபர் நான் வேறொரு பூமியில் இருந்து வந்திருக்கிறேன் என கூறியுள்ளார். 

அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவரது பெயர் ஜேசன் ஸ்மித் (44) என தெரிய வந்தது. அநாகரீக முறையில் உடல் பாகங்களை காட்டுதல், ஒழுங்கற்ற நடத்தை மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது போலீசார் பதிவு செய்தனர். அவரை கைது செய்து அழைத்து சென்று உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

Florida

சமீபத்தில் கோவா பீச்சில் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த ஒருவர் இதுபோன்று நிர்வாண கோலத்தில் நடந்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. அந்த நபரிடம் கிராமவாசி ஒருவர் பேச்சு கொடுத்து உள்ளார். அந்த உரையாடலை கிராமத்து நபர் பதிவும் செய்த விவரங்கள் அடங்கிய வீடியோ சமூக ஊடகத்தில் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது. அதன்பின்பு அந்த நபருக்கு ஆடை அணிவிக்கப்பட்டது.

From around the web