அமெரிக்காவில் வானொலி கோபுரத்தில் மோதி வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்.. குழந்தை உட்பட 4 பேர் பலி!

 
Texas

அமெரிக்காவில் ரேடியோ கோபுரத்தில் மோதி ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எலிங்கடன் விமான நிலையத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஹூஸ்டன் நகரில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ரேடியோ கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதியது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. 

Texas

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 4 பேரும் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இதனை ஹூஸ்டன் மேயர் ஜான் விட்மயர் உறுதிப்பட்டுத்தினார். 

இது குறித்து அவர் கூறுகையில், “இது ஒரு சோகமான நிகழ்வு; இந்த சோகமான நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஹெலிகாப்டர் மோதிய இடத்தில் இருந்த குடியிருப்பவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” என்று கூறியுள்ளார்.


மேலும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்  எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் இடித்த உடன் தீப்பிடித்து, பயங்கர சத்தத்துடன் கீழே விழும் கோரமான விபத்தின் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

From around the web