ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்து.. 22 பேர் பலியான சோகம்

 
Russia Russia

ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள், விமானிகள் உள்பட அனைவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் கிழக்கே கம்சத்கா தீபகற்ப பகுதியில் சுற்றுலாவாசிகளை கவர கூடிய வகையிலான வச்சகாஜெட்ஸ் என்ற எரிமலை பகுதி உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா வருவது வழக்கம். இந்த நிலையில், இந்த எரிமலை பகுதியருகே 19 பயணிகள் மற்றும் 3 விமானிகளுடன் மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று நிக்கோலாயீவ்கா கிராமம்  நோக்கி புறப்பட்டது.  

Russia

அந்த ஹெலிகாப்டர் எரிமலை பகுதியருகே, திடீரென விபத்தில் சிக்கியது. இதில், அந்த ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள், விமானிகள் உள்பட அனைவரும் உயிரிழந்தனர் என கம்சத்கா பகுதிக்கான கவர்னர் விளாடிமிர் சோலோடாவ் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நேற்று மீட்பு பணி நடந்தது. இதில், விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் 900 மீட்டர் உயரத்தில் கிடந்தது தெரிய வந்துள்ளது. இதன்பின் நடந்த தேடுதல் மற்றும் மீட்பு பணியில் 17 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.


2021-ம் ஆண்டு இதேபோன்று சுற்றுலாவாசிகளை ஏற்றி கொண்டு சென்ற மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று, எரிமலை வெடித்து அதனால் ஏற்பட்ட ஏரி பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில், 8 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web