தென்கொரியாவில் கனமழை.. நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி!

 
South Korea

தென்கொரியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்கொரியாவில் கடந்த 9-ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்கு பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. அங்குள்ள நோன்சான், யோங்ஜூ ஆகிய பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தது.

அதேபோல் செஜோங் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அங்கு பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதனால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

South Korea

மத்திய மற்றும் தென்கிழக்கு பிராந்தியங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 26 பேர் உயிரிழந்தாக உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜூலை 9 முதல் தென் கொரியா கனமழையால் பாதிப்படைந்துள்ளது. மழைப்பொழிவு காரணமாக சுமார் 5,570 பேர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களில் 25,470 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை என்றும் அமைச்சக அறிக்கை கூறியுள்ளது. சனிக்கிழமை இரவு வரை 4,200 க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருப்பதாக அது கூறியது.

South Korea

தென் கொரியாவின் சில பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சனிக்கிழமையன்று உக்ரைனுக்கு விஜயம் செய்த அதிபர் யூன் சுக் யோல், பிரதமர் ஹான் டக்-சூவிடம், பேரழிவிற்கு பதிலளிக்க அனைத்து வளங்களையும் திரட்டுமாறு கேட்டுக் கொண்டார் என்று யூனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 9 முதல், கோங்ஜு நகரம் மற்றும் சியோங்யாங் மாகாணத்தில் முறையே 600 மில்லி மீட்டர்கள் (24 அங்குலம்) அதிக மழைப்பொழிவை மத்தியப் பகுதிகள் பெற்றுள்ளன.

From around the web