உலகப் புவி நாள்! அமெரிக்கத் தமிழர்களுக்கு கார்த்திகேய சிவசேனாபதி நேரில் பாராட்டு!!

 
Atlanta

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வசிக்கும் தமிழர்கள் 7-வது ஆண்டாக உலகப் புவி நாள் சிறப்பு நிகழ்ச்சி நடத்தினார்கள். இந்த ஆண்டு சீர்காழியில் அமைந்துள்ள ஏரியை சீரமைப்பதற்க்காக நிதி திரட்டப்பட்டது.

கம்மிங் நகரில் உள்ள ஃபௌலர் பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

“தமிழ் மக்கள் ஒன்று கூடி மரக் கன்றுகளை வளர்த்தி விற்பனை செய்வது மட்டுமன்றி பல்வேறு பொருட்களை செய்து கொண்டு வந்து விற்று அதன் மூலம் வரக்கூடிய தொகையை வைத்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில்  இருக்கக்கூடிய நீர் ஆதாரங்களை பெருக்க சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்க குளங்குட்டைகளை தூர்வார அந்த பணத்தை நன்கொடையாக கொடுத்து வருவது மிகவும் பெருமையாக இருக்கிறது.

Atlanta

இந்த வருடம் Earth Day நிகழ்வில் கலந்து கொண்டு  உரையாற்றுவது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது  18,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் தமிழ் மண்ணையும், தமிழ் மக்கள் மீதும் அளவற்ற அன்பும் பாசமும் நேசமும் கொண்ட தமிழ் உறவுகள் கொண்டுள்ள கடமை உணர்ச்சியை நினைக்கும் பொழுது பெருமிதமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. 

தமிழ்நாடு அரசும், அயலக தமிழர் நல வாரியமும்  மாண்புமிகு முதல்வர் அவர்களும் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம். இங்கு சந்தித்த தமிழர்கள் அனைவரும் அயலகத் தமிழர் நல வாரியத் துறையையின் செயல்பாடு பற்றி, குறிப்பாக அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை பற்றிய செய்தியை பாராட்டி மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். உங்கள் பாரட்டுகளையும் வாழ்த்துகளையும்  நம்முடைய முதல்வர் அவர்களுக்கு  முதல்வரிடம் உங்கள் சார்பில் தெரிவிப்பதற்கு உறுதி அளிக்கிறேன். 

Atlanta

தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நல வாரியத்தையும்  என்றென்றும் உலக வாழ் தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை இந்த அருமையான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த, மிக முக்கியமாக இந்த நிகழ்வினை தொடங்கி திறம்பட நடத்தி வரும்  நான்கு பெண்கள் மற்றும் அவர்கள் குழுவினருக்கு  அன்பு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று கார்த்திகேய சிவசேனாபதி வாழ்த்துரைத்தார்.

அட்லாண்டா புவி நாள் குழுவினரின் சார்பில் முன்னதாக, சேலம் அம்மாபேட்டை ஏரி, கோயமுத்தூர் வெள்ளளூர் ஏரி, காரைக்குடி தேனாறு, தஞ்சாவூர் மாவட்டத்தின் 7 ஏரிகள், புதுக்கோட்டை மாவட்டத்தின் 7 ஏரிகள், ராமநாதபுரம் மாவட்டத்தின் 5 ஏரிகளின் புணரமைப்புக்காக நிதி திரட்டி பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது.

From around the web