30 நாட்களுக்கு துப்பாக்கிக்கு தடை.. நியூ மெக்சிகோ மாகாண கவர்னர் அதிரடி உத்தரவு

 
New Mexico

நியூ மெக்சிகோ மாகாணத்தில் துப்பாக்கி வன்முறையை தவிர்க்க அம்மாகாண கவர்னர் புதிதாக நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை துப்பாக்கி சூட்டுக்கு பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Gun

அந்த வகையில், அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் கடந்த 6-ந்தேதி அங்குள்ள அல்புகெர்கி பகுதியின் கூடைப்பந்து மைதானத்துக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுபோன்ற துப்பாக்கி வன்முறையை தவிர்க்க நியூ மெக்சிகோ மாகாண கவர்னர் புதிதாக நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

New Mexico

அதில் நியூ மெக்சிகோ மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் அடுத்த 30 நாட்களுக்கு துப்பாக்கிகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதன்பிறகு மீண்டும் இந்த உத்தரவு நீட்டிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் சட்ட போராட்டத்தை சந்திக்க தான் தயார் எனவும் அவர் அங்குள்ள நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

From around the web