நிதி திரட்டும் பள்ளி.. மாணவர்களை கால்களை முத்தமிட்டு, நக்க செய்த கொடூரம்.. பகீர் வீடியோ!
அமெரிக்காவில் கால் பெரு விரல்களில் வேர்க்கடலை வெண்ணெய் தடவி சக மாணவர்கள் நக்கி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தின் எட்மண்ட் நகரில் டீர் கிரீக் என்ற பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி ஒரு வார கால நிதி திரட்டும் சமூக சேவைக்கான பணிகளை மேற்கொண்டு உள்ளது. இதில், மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பல்வேறு வழிகளில் நிதி சேகரிக்கும் பணியானது நடந்துள்ளது.
அவற்றில் ஒன்றாக, மாணவர்களின் கால் பெரு விரல்களில் வேர்க்கடலைகளை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட வெண்ணெய்யை தடவி விடுவார்கள். அதனை சக மாணவர்கள், தரையில் படுத்தபடி நாக்கால் நக்கி, சாப்பிட வேண்டும். இதில், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டனர். அவர்களின் கால் பெரு விரல்களில் வேர்க்கடலை வெண்ணெய் தடவப்பட்டது.
போட்டி என்ற பெயரில், சக மாணவர்கள் அதனை நக்கி சாப்பிடும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில், மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், மற்ற மாணவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு உள்ளனர். பலர் கண்டனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.
இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி வழியே, ரூ.1 கோடியே 26 லட்சத்து 61 ஆயிரம் அளவுக்கு பணம் திரண்டுள்ளது. இதற்காக மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளனர். எனினும் நிறைய பணம் சேர்ந்ததற்காக, ஒரு சில பெற்றோர் இதற்கு வரவேற்பும் தெரிவித்து உள்ளனர்.
🚨GRAPHIC WARNING-Deer Creek High students in Oklahoma, kiss and suck donors’ feet at a strange ritual “charity” event.
— VINCENT OSHANA (@VincentOshana) March 2, 2024
As a parent, would you allow your child to participate in something as grotesque as this? 🤔 pic.twitter.com/aKHqNdI07y
கடந்த பிப்ரவரி 29-ம் தேதி இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. அந்த பள்ளியில் ஒரு வார காலத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அருகேயுள்ள காபி கடை ஒன்றில் வேலைக்கு மாற்று திறனாளிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வழங்குவதற்காக இந்த நிதி சேகரிக்கும் பணி நடந்துள்ளது.