சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி.. ஆஸ்திரேலியாவில் பயங்கரம்!

 
Australia

ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள க்ரூனாவ் இம் அல்ம்டல் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flight

கடுமையான பனிப் பொழிவுக்கு மத்தியில் மலைப்பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் சிதறி கிடப்பதை பார்த்த பிறகே தேடுதல் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சிறிய ரக விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்த இதுவரை காரணம் கண்டறியப்படாத நிலையில், அது குறித்து ஆஸ்திரேலிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

flight

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேர் யார் என்ற அடையாளமும் காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web