கொடூர கைதியுடன் உல்லாசம்.. சிறை பெண் ஊழியரின் காம லீலை.. வெளியான புகைப்படத்தால் சிக்கல்!! 

 
ENgland

இங்கிலாந்தில் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கொடூர கைதியுடன் உல்லாசமாக இருந்த சிறை பெண் ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஜோர்டான் மெக்ஸ்வீனி (29) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தப் படுகொலை பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது.

இந்த வழக்கில் குற்றசாடப்பட்ட ஜோர்டான், ‘எந்தவொரு பெண்ணுக்கும் ஆபத்து’ என்று வர்ணிக்கப்பட்டார். கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு நீதிமன்றத்தால் அவருக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

murder

இதை தொடர்ந்து ஜோர்டான் தென் கிழக்கு லண்டனின் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஹைடெக் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜோர்டான் மேலும் பல பெண்களை இதுபோல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. 

கைதியாக இருந்த ஜோர்டானை 32 வய்து சிறை பெண் ஊழியர் நீண்ட நாட்களாக ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்து உள்ளார். ஆனால் இது குறித்த ஆதாரங்கள் எதுவும் சிறை அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.

England

இந்த நிலையில் இந்த முறை அந்த பெண் ஊழியர் ஜோர்டான் மெக்ஸ்வீனியுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் ஆதாரமாக சிக்கியதால் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த பெண் ஊழியர் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அந்த பெண் மீது லண்டன் போலீசார் சிறை போன்ற முக்கியமான இடத்தில், தவறான நடத்தை போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

From around the web