மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் காயம்.. துருக்கியில் பயங்கரம்
துருக்கியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி நாட்டின் எஸ்கிசிர் மாகாணம் எஸ்கிசிர் நகரில் உள்ள தேநீர் கடையில் இன்று கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இன்று அந்த கடையில் வாடிக்கையாளர்கள் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஹெல்மெட், துப்பாக்கி துளைக்காத கவச உடை அணிந்து கத்தியுடன் வந்த இளைஞர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Terrorist Attack in Turkey:A masked man with a skull print and a Nazi SS "Totenkopf" patch attacked the Eskisehir-Tepebasi mosque, stabbing seven people and k!lling one with an axe.
— 21 Chapo 𝕏 (@ElonChapo) August 13, 2024
pic.twitter.com/muQswuJtqi
மேலும், தாக்குதல் நடத்திய அர்டா என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தாக்குதல் நடத்திய இளைஞரிடமிருந்து கோடாரியும் கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.