சீக்கியர் மீது துப்பாக்கிச்சூடு.. துடிதுடித்து பலி.. பாகிஸ்தானில் தொடரும் சோகம்!!

 
Pakistan

பாகிஸ்தானில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சீக்கியர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் மக்கள்தொகையில் சுமார் 4 சதவீதம் சிறுபான்மையினராக உள்ளனர். அங்கு சமீப காலமாக இவர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது. பெஷாவர் நகரில், 15,000க்கும் அதிகமான சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இங்கு சீக்கியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர்.

gun

இந்த நிலையில், பெஷாவர் நகரில் உள்ள ரஷித்கர்ஹி பஜாரில் மன்மோகன் சிங் என்ற சீக்கியர் மளிகை கடை நடத்தி வந்தார். கடையை மூடி விட்டு மன்மோகன் சிங் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் அவர் மீது சரமாரி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடினர்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஒரு குழந்தை, வயதான பெற்றோர், ஒரு சகோதரி, ஒரு மாற்று திறனாளி சகோதரர் உள்ளனர்.

Police

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு வசிக்கும் சிறுபான்மையினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் பெஷாவரில், தர்லோக் சிங் என்ற சீக்கியர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web