மெக்சிகோவில் பெண் மேயர் வேட்பாளர் சுட்டுக்கொலை.. தேர்தல் பிரசாரத்தின் போது நிகழ்ந்த கொடூரம்!

 
Mexico

மெக்சிகோவில் மேயர் வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் வரும் ஜூன் 2-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே அங்கு துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசியல் ரீதியான கொலைகளும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.

gun

இந்த நிலையில் ஆளும் கட்சி பெண் மேயர் வேட்பாளர் கிசெலா கெய்டன், தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே, குவானாஜுவாடோவில் உள்ள செலாயா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Mexico

38 வயதான கிசெலா கெய்டன், ஒரு முன்னாள் வழக்கறிஞர் ஆவார். மெக்சிகோவில் கடந்த அக்டோபர் 2023 முதல் தேர்தலில் நிற்கப் போவதாக அறிவித்த 14 பேர் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web