பெற்ற 3 மகள்களையும் குத்தி கொன்ற கொடூர தந்தை.. பிரான்சில் பயங்கரம்!

 
France

பிரான்சில் தந்தை ஒருவர் தனது 3 மகள்களையும் கொன்றுவிட்டதாக கூறி சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் தலைநகர் பாரிஸின் தென்கிழக்கு புறநகர் பகுதியான அல்ஃபோர்ட்வில்லி நகரைச் சேர்ந்த 41 வயது நபருக்கு 11, 10 மற்றும் 4 வயதில் 3 மகள்கள் இருந்தனர். இந்த நிலையில், 3 மகள்களையும் அவர் கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளார். இதன்பின்பு தப்பியோடி விட்டார். அவர்களின் உடல்கள் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

Murder

இதனை தொடர்ந்து, அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், வடக்கு கடற்கரை நகரமான டையெப்பில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு என் மூன்று மகள்களையும் கொலை செய்துவிட்டேன் என்று கூறி போலீசாரை அதிர வைத்துள்ளார்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4, 10 மற்றும் 11 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் உடல்களை போலீசார் மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு வழக்கறிஞர் மூன்று குழந்தைகளின் இறப்பை உறுதிப்படுத்தினார். அத்துடன் குறித்த நபர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

France

கொலையாளி ஏற்கனவே 2021ஆம் ஆண்டில் குடும்ப வன்முறை தண்டனை பெற்றார் என்று வழக்குக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது. 3 மகள்களை பெற்ற தந்தையே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web