காதல் திருமணம் செய்த 2 மகள்களை கௌரவக் கொலை செய்த தந்தை.. பாகிஸ்தானில் பயங்கரம்

 
Honour

பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்ததற்காக 2 மகள்களை தந்தை துப்பாக்கியால் சுட்டு கௌரவக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து 350 கி.மீட்டர் தொலைவில் உள்ளது விஹாரி. பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் நிஷாத், அப்ஷான் ஆகிய இளம் பெண்கள் (20) கடந்த மாதம் தங்களது வீட்டில் இருந்து வெளியேறினர். வீட்டில் இருந்து வெளியேறிய அவர்கள் இருவரும் தங்களது காதலர்களை திருமணம் செய்து கொண்டனர். நீதிமன்றத்தில் ஆஜராகி அதன்பிறகு திருமணம் செய்து கொண்டனர்.

gun

ஆனால், கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தில் அந்த இரு பெண்களின் தந்தை, திருமணம் செய்த அந்த நபர்களின் குடும்பத்தினர் தனது 2 மகள்களையும் தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி கேட்டுள்ளார். அதன்படி பஞ்சாயத்தும் திருமணம் செய்து கொண்ட வாலிபர்களின் குடும்பத்தினரிடம், அந்த இரு பெண்களையும் அவரது தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி அந்த இரண்டு பெண்களும் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பின்னர் இருவரையும் வீட்டிற்கு அழைத்ததுச் சென்ற தந்தை, தனது மகனுடன் சேர்ந்த இருவரையும் துன்புறுத்தியுள்ளனர். பின்னர் இருவரும் குடும்பத்தினருடன் சேர்ந்த துப்பாக்கில் சுட்டு கொலை செய்துள்ளனர்.

dead-body

இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானில் ஆண்டுதோறும் 1,000 பெண்கள் இதுபோன்று கௌரவக் கொலை என்ற பெயரில் கொலை செய்யப்படுவதாக கவலை தெரிவித்துள்ளது.

From around the web