கால்பந்து மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள்.. கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி.. எல் சால்வடாரில் சோகம்!!

எல் சால்வடாரில் கால்பந்து மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்கா நாடான எல் சால்வடாரின் தலைநகர் சான் சால்வடாரில் கஸ்கட்லான் கால்பந்து மைதானம் அமைந்து உள்ளது. இந்த மைதானத்தில் தற்போது சால்வடார் லீக் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த லீக்கின் கால் இறுதி போட்டி அலியான்சா மற்றும் எப்.ஏ.எஸ். என்ற இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. இந்த போட்டியை வெளியில் இருந்தும் மரங்கள், உயரமான கட்டிடங்களில் ஏறி ஏராளமான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வெளியில் நின்ற ரசிகர்கள் திடீரென மைதானத்தின் நுழைவாயில் கேட்டை உடைத்துக் கொண்டு அத்துமீறி உள்ளே நுழைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதையடுத்து 16 நிமிடங்களில் போட்டி இடை நிறுத்தப்பட்டது.
A crowd crush at a stadium in El Salvador has killed at least a dozen people after football fans tried to push through one of the gates at the Estadio Cuscatlan.
— AJE Sport (@AJE_Sport) May 21, 2023
Officials say around 100 people have been hospitalised ⤵️ pic.twitter.com/6rUUGLvUl8
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைய முயன்றதால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. எனவே கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.