ஓடும் காரை தாவிக் குதித்த பிரபல யூடியூபர்.. வைரல் வீடியோ!

 
America

அமெரிக்காவில் பிரபல யூடியூபர் சமீபத்தில் வேகமாக வரும் காரில் தாவிக்குதித்து தாண்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர், டேரன் ஜேசன் வாட்கின்ஸ் ஜூனியர். இவர் அவருடைய யூடியூப் தளத்தின் பெயரான ‘ஐ ஷோ ஸ்பீடு’ (IShowSpeed) என்ற பெயரின் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார். 19 வயதான இவர், 2.05 கோடி சந்தாதாரர்களுடன் மிகவும் பிரலமான யூடியூப் ஸ்ட்ரீமராக வலம் வருகிறார். நகைச்சுவையான இவருடைய யூடியூப் ஸ்ட்ரீம்களானது பல்லாயிரம் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.

Jason

இவர் சமீபத்தில் வேகமாக ஓடி வரும் காரை, தாவி குதித்து தாண்டியபடி வீடியோ பதிவு செய்தார். இவருக்காக, இவரது தந்தை தங்களுக்கு சொந்தமான சொகுசு காரை வேகமாக ஓட்டி வருகிறார். ஓடி வரும் காருக்கு முன்னே தைரியமாக நிற்கும் ஸ்ட்ரீமர் சரியான நேரத்தில் காரை தாவிக்குதித்து, உயரம் தாண்டும் வீரர் போல அந்தப் பக்கம் சாய்ந்துவிடாமல் கம்பீரமாக நிற்கிறார்.


பின்னர் சாகசத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கிறார். தந்தையுடன் ஹைபை செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். அந்த வீடியோவை பின்னர் வலைத்தளத்தில் பதிவேற்றினார். “இந்த சாகசத்தை செய்த உலகின் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். லைக் பண்ணுங்க, சேர் பண்ணுங்க” என்று பேசுகிறார். இரண்டே நாளில் இந்த வீடியோவை சுமார் 4 கோடி பேருக்கு மேல் ரசித்துள்ளனர். 

From around the web