பிரபல இளம் யூடியூபர் மர்ம மரணம்.. பக்கத்து வீட்டின் கொல்லைப்புறத்தில் சடலமாக மீட்பு.. பிரேசிலில் பரபரப்பு

 
Brazil

பிரேசிலில் பிரபல இளம் யூடியூபர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் கார்லஸ் ஹென்றிக் மெடிரோஸ் (26). இவர், கடந்த மாதம் 25-ம் தேதி, அதாவது கிறிஸ்துமஸ் தினத்தன்று காணாமல் போனார். நண்பர்களின் வீட்டிற்கு இரவு விருந்துக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. நண்பர்களிடம் விசாரித்தபோது அவர் ஏற்கனவே வீட்டை விட்டு புறப்பட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மெடிரோசின் குடும்பத்தினர் சனிக்கிழமை வரை மருத்துவமனைகள் மற்றும் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தேடினார்கள். அதன்பின்னர், அருகில் உள்ள ஒரு வீட்டின் பின்பகுதியில் மண் மேடு இருப்பதை பார்த்த சிலர் சந்தேகம் அடைந்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது ஒரு டி-ஷர்ட் வெளியே தெரிந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

youtube

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த இடத்தை தோண்டியபோது, காணாமல் போன யூடியூபரின் சடலம் மீட்கப்பட்டது. இதனால் அந்த வீட்டில் வசிக்கும் ரேனன் ஜோஸ், அவரது மனைவி கரோலின் இருவரும் சேர்ந்து யூடியூபரை கொலை செய்து புதைத்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த வீட்டில் வசிக்கும் கணவன்-மனைவி இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, யூடியூபர் மெடிரோஸ் அதிக அளவில் போதை மருந்து உட்கொண்டு மெல்லோவின் சகோதரியுடன் உடலுறவு கொள்ளும்போது உயிரிழந்ததாகவும், பயந்துபோய் உடலை புதைத்ததாகவும் கூறி உள்ளனர்.

dead-body

ஆனால் இந்த வாக்குமூலத்தை மெடிரோசின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. மெடிரோசின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே இது கொலையா? அல்லது போதை மருந்தால் ஏற்பட்ட மரணமா? என்பது தெரியவரும்.

From around the web