புலியை சங்கிலியால் கட்டி நடந்து சென்ற பெண் பிரபலம்.. வைரல் வீடியோ!

 
Tiger

துபாயில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் உள்ள பூங்காவிற்குள் நாடியா கர் என்ற பெண் புலியுடன் நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே சிலர் வித்தியாசமான செயல்களை செய்து அதனை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், நாடியா கர் என்ற பெண் உலகளவில் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார். இவர் அடிக்கடி சொகுசு கார்களில் வலம் வருவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ஆவார். 

Dubai

இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், அவர் துபாயில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் உள்ள பூங்காவிற்குள் புலியுடன் நடந்து செல்வது போன்றும், அப்போது  புலியின் கழுத்தில் சங்கிலி கட்டி இழுத்து செல்வது போன்றும் காட்சி உள்ளது. வீடியோவுடன் அவரது பதிவில், துபாயில் எனது செல்ல புலியை அழைத்து செல்வது வித்தியாசமானது என்று கூறியிருந்தார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. 

வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், துபாயில் இப்படி சுற்றித்திரிந்து எவ்வாறு பிரச்சனையில் சிக்காமல் இருக்க முடிகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

From around the web