சாலை விபத்தில் பிரபல பெண் பைக் ரைடர் பலி.. ரசிகர்கள் சோகம்!

 
Russia

ரஷ்யாவின் பிரபல பைக் ரைடர் டாட்டியானா ஓசோலினா விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் மிக அழகான மோட்டார் பைக் ரைடர் என வர்ணிக்கப்படும் சமூக வலைதளத்தில் பிரபலமான டாட்டியானா ஓசோலினா (38). இவர், “மோடோ டான்யா” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்பட்டார். இவர் துருக்கியிலுள்ள மிலாஸ்-சேக் நெடுஞ்சாலையில் பிஎம்டபிள்யூஎஸ்1000ஆர் என்ற  பைக்கில் நண்பர்களுடன் சென்றுக் கொண்டிருந்தபோது  பைக் இவரது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

Russia

இந்நிலையில், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த டாட்டியானா ஓசோலினா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அவரது ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, டாட்டியானா ஓசோலினாவுடன் சென்ற இரண்டு நண்பர்கள் இந்த விபத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2023-ம் ஆண்டில் டாட்டியானா ஓசோலினா ஆண்டின் சிறந்த மோட்டோபிளாகர் மற்றும் 2024-ம் ஆண்டு இந்த ஆண்டின் சிறந்த பிளாகர் என்றும் கௌரவிக்கப்பட்டார். அவரது இறுதி சமூக ஊடக பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web