பிரபல ராப் பாடகர் மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!! வைரல் வீடியோ

 
Big Pokey

பிரபல ராப் இசை பாடகர் பிக் போக்கி மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் ராப் இசை பாடகர் பிக் போகி (45). 50க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள இவர், பல ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார். ராப் இசையை ரசிப்பவர்கள மத்தியில் இவர் மிகவும் பிரபலம். பிற இசைக்கலைஞர்களை போல, இவரும் அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். 

அந்த வகையில், டெக்சாஸ் மாகாணத்தின் பியூமான்ட் நகரில் உள்ள பார் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு நடந்த கச்சேரி ஒன்றில் மேடையில் ராப் பாடல்களை பாடி கொண்டிருந்து உள்ளார். அப்போது, திடீரென அவருக்கு மூச்சிறைப்பு ஏற்பட்டது.

Big Pokey

இதனைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சில வினாடிகளில் அவர் சரிந்து கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் உடனடியாக அங்கு அவசர உதவிகள், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து பாடகர் பிக் போக்கி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிக் போக்கியின் மரணத்துகான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகாத நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிக் போக்கி உண்மையான பெயர் மில்டன் பவல் ஆகும். தொடக்க காலத்தில் உள்ளூர் இசைக்குழுவில் பாடி வந்த பிக் போக்கி அந்நகரில் தொடர்ந்து பிரபலமானார். 


1999-ம் ஆண்டு வெளியான “தி ஹார்டெஸ்ட் பிட் இன் தி லிட்டர்” எனும் ஆல்பத்தால் பிக் போக்கி பிரபலமானார். இறுதியாக 2021ம் ஆண்டு “சென்செய்” எனும் ஆல்பத்தை வெளியிட்டிருந்தார். அவரது மறைவுக்கு சக ராப் பாடகர்களான பன் பி, பால் வால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஹூஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னரும் தனது இரங்கலை தெரிவித்து கொண்டார்.

From around the web