எலான் மஸ்க்கிற்கு மந்திரி பதவி.. முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

 
Trump - Musk

நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் எலான் மஸ்க்கிற்கு மந்திரி பதவி வழங்குவதாக டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதே சமயம், ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) அறிவிக்கப்பட்டார். 

ஆனால், வயது முதிர்வு, டிரம்புடனான விவாதத்தின்போது திணறல், உள்ளிட்ட சர்ச்சைகளால் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. கட்சியினரின் அதிருப்தி அதிகரித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்த ஜோ பைடன், அதற்கான அறிவிப்பையும் கடந்த மாதம் 21-ம் தேதி வெளியிட்டார். தொடர்ந்து, கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவுத்து தன்னுடைய முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார். 

Elon Musk

அதனை தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (59) அறிவிக்கபட்டார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட, கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸே முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது, வாஷிங்டன் போஸ்ட், ஏபிசி நியூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கின்றன. அதில் கமலா ஹாரிசுக்கு 49 சதவீத ஆதரவும் டொனால்ட் டிரம்புக்கு 45 சதவீத ஆதரவும் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதனிடையே டொனால்டு டிரம்பிற்கு ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா மற்றும் எக்ஸ் வலைத்தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் ஆதரவளித்து வருகிறார். 

Donald-trump

இந்நிலையில் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது நீங்கள் வெற்றி பெற்றால் எலான் மஸ்குக்கு ஆட்சியில் பதவி வழங்குவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டொனால்டு,நிச்சயம் நான் மறுபடியும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு திரும்பவேன். என்னுடைய நிர்வாகத்தில் பங்கேற்க எலான் மஸ்க் தயாராக இருந்தால் மந்திரி பதவி அல்லது ஆலோசகர் பதவி வழங்குவேன். அவர் ஒரு புத்திசாலித்தனமான மனிதர் என கூறினார். டிரம்ப் அளித்துள்ள இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வதாக எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

From around the web