திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி பிறந்தநாள் கவியரங்கம்! அமெரிக்கத் தமிழர்கள் கொண்டாட்டம்!!

 
K Veeramani

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 92வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் கவியரங்கம் நடைபெற்றது.

கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷனியின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கவியரங்கத்தில் அமெரிக்காவிலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும் கவிஞர்கள் கலந்து கொண்டனர்

கவிஞர்கள் சாந்தி நாராயணன், பாப்பாக்குடி செல்வமணி, இராமமூர்த்தி, அன்புடன் ஆனந்தி, டெய்சி, ம.வீ.கனிமொழி, செல்வகுமார், இறைவி, வாசன் எழிலன், தகடூர் தமிழ்ச் செல்வி ஆகியோர் கி.வீரமணியின் சமூகப் பணிகளைப் பாராட்டி கவிதை மழைகள் பொழிந்தனர்.

10 வயது தொடங்கி 82 ஆண்டுகளாக தந்தை பெரியார் வழியில், திராவிடர் கழகத்தின் தலைமையேற்று பகுத்தறிக் கொள்கைகளை தொடர்ந்து பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சமூகநீதிக்கான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவதையும் பாராட்டும் வகையில் இந்த கவிதைகள் இருந்தது.

அமெரிக்காவுக்கும் தமிழ்நாட்டிற்குமான தொப்புள் கொடி உறவாக இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷனி குறிப்பிட்டார்.

கொக்கரக்கோ கவிதை இதழ் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி ஒளிப்பதிவு:  https://www.facebook.com/PASCUSAmerica/videos/pasc-americas-personal-meeting-room/1246080226515551/

From around the web