ரூ 4,200 நன்கொடை... தேசத்துரோக குற்றச்சாட்டில் கைதான அமெரிக்க - ரஷ்ய பெண்மணி

 
russia

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போருக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த பெண் ஒருவரை தேசத்துரோக குற்றச்சாட்டில் ரஷ்யா கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இதற்கு உலகம் முழுவதும் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. எனினும், போரானது தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில், உக்ரைனின் கிழக்கே வோல்நோவாகா நகரை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி உள்ளது. அந்த நகரம், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ரஷ்யாவின் பிடியில் உள்ளது.  

இந்த நிலையில், உக்ரேனிய அமைப்புகளுக்காக நிதி திரட்டியதுடன், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போருக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த பெண் ஒருவரை தேசத்துரோக குற்றச்சாட்டில் ரஷ்யா கைது செய்துள்ளது. குறித்த கைது நடவடிக்கை தொடர்பான தகவல்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை தற்போது கோரிக்கை வைத்துள்ளது.

Russia

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்த 2022 பிப்ரவரி மாதம் இவர் உக்ரைன் அமைப்பு ஒன்றிற்கு 51 டாலர் நன்கொடையாக அளித்துள்ளார். இதுவே அவரை தேசத்துரோக வழக்கில் சிக்க வைத்துள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியிருக்கும் 33 வயது க்சேனியா கவானா கைது செய்யப்பட்டுள்ளதை ரஷ்யாவின் FSB உறுதி செய்துள்ளது.

அமெரிக்க குடிமக்கள் ரஷ்யாவுக்கு பயணப்படுது தொடர்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்த கைது நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனிடையே, பிரான்சில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன்னாள் ஆலோசகருக்கு தேசத்துரோக குற்றச்சாட்டில் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

women-arrest

கைதிகள் விடுவிப்பது தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ரஷ்ய அதிபர் புதின் உறுதி செய்வதற்கு முன்னர் க்சேனியா கவானா கைது நடவடிக்கை வெளியாகியுள்ளது. போரில் காயமடையும் உக்ரைன் வீரர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துவரும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு க்சேனியா கவானா 51 டௌலர் (ரூ 4,227) நன்கொடை அளித்துள்ளார் என்றே கூறப்படுகிறது.

From around the web