அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்.. கருத்துக்கணிப்புகளில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை

 
Trump

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, அரிசோனா, விஸ்கான்சின், பென்சில்வேனியா உள்ளிட்ட பிரதான மாகாணங்களில், அதிபர் ஜோ பைடனை, டொனால்ட் டிரம்ப் பின்னுக்குத் தள்ளி உள்ளது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

Joe-Biden

2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றியை தன்வசமாக்கிய ஜார்ஜியா மாகாணத்தில், டொனால்ட் டிரம்ப் 5 சதவீத அதிக வாக்குகள் பெறக்கூடும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த தேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் கைப்பற்றிய மிச்சிகன் மாகாணத்தில், டொனால்ட் டிரம்ப் 10 சதவீத வாக்குகள் அதிகமாக பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JoeBiden-Trump

நெவாடா, அரிசோனா, விஸ்கான்சின், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களிலும், ஜோ பைடனை டிரம்ப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெறக்கூடும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிபர் ஜோ பைடனின் கொள்கைகள், பொருளாதார நிலைமையை மோசமாக்கி இருப்பதும், அதன் தாக்கம் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளில் எதிரொலித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web