மனைவியை கற்பழித்தாரா..? டிரம்பின் வாழ்க்கை வரலாறு படத்தை எதிர்த்து வழக்கு

 
Trump

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தனது முதல் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற காட்சி இடம்பெற்று இருத்தது பார்வையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்பின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் டிரம்ப் வேடத்தில் செபாஸ்டியன் ஸ்டான் நடித்து இருக்கிறார். இந்தப் படத்தை அலி அப்பாசி இயக்கி உள்ளார். இந்த படம் பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. படத்தில் பெண்களை டிரம்ப் பலாத்காரம் செய்வது போன்ற அவதூறு காட்சிகள் இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.

rape

குறிப்பாக தனது முதல் மனைவியான இவானாவை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியது. விவாகரத்து வழக்கு விசாரணையின்போது இவானாவே தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடும் நிலையில் இந்த படம் அவருக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அச்சம் நிலவுகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பொய்யானவை என்றும், எனவே படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் டிரம்ப் வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர்.

Ivana

இதுகுறித்து இயக்குநர் அலி அப்பாசி கூறும்போது, எங்கள் மீது டிரம்ப் தரப்பினர்  வழக்குத் தொடரும் முன் படத்தைப் பார்க்க காத்திருக்க வேண்டும். இது அவர் விரும்பாத படம் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஆச்சரியப்படுவார் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

From around the web