மன அழுத்ததில் இருந்த தாய்.. 3 பிள்ளைகளுக்கு விஷம்.. வெளியான அதிர்ச்சி சம்பவம்

 
England

இங்கிலாந்தில் தாயார் ஒருவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்ற நிலையில், தமது பிள்ளைகள் மூவருக்கு விஷம் அளித்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இங்கிலாந்தின் தென் லண்டன் பகுதியைச் சேர்ந்தவர் லாரா டர்னர் (44). இவரே மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்று சுய நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர். ஆனால் தமது இளம் வயது பிள்ளைகள் மூவருக்கு விஷம் அளித்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் லாரா டர்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டதை அவர் கவலையுடன் பதிவு செய்துள்ளார்.

ஆனால் உண்மையில், லாரா டர்னருக்கான மன அழுத்தத்திற்கு எதிரான மருந்துகளை தமது பிள்ளைகள் அறியாமல் உட்கொண்டிருக்கலாம் என்றே அவர் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

LOndon

இந்த நிலையில் மருத்துவமனைக்கு விரைந்த லாரா டர்னரின் கணவர், தாயாரின் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை அவர்கள் உண்மையில் உட்கொண்டார்களா என்பதைக் கண்டறிய குழந்தைகளிடமிருந்து சிறுநீர் மாதிரிகளை எடுக்க செவிலியர்களிடம் அனுமதி கேட்டார். இதனிடையே பிள்ளைகள் மூவரும் எந்த பாதிப்பும் இன்றி நலமாக இருப்பதை அறிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, லாராவின் குடியிருப்புக்குள் நுழைந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர், குடும்ப உறுப்பினர்கள் எவரையும் உள்ளே அனுமதிக்கவும் இல்லை.

மட்டுமின்றி, லாராவின் மூத்த இரு பிள்ளைகளிடம் தனித்தனியாக விசாரணையும் மேற்கொண்டனர். இதன் பின்னரே, பிள்ளைகள் மூவரையும் அவர்களின் தந்தையுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். லாராவின் இந்த நெருக்கடியான நிலைக்கு காரணம், அவர் எடுத்த அந்த ஒற்றை முடிவு. மூன்று பிள்ளைகளின் தாயாரான லாரா டர்னர் சுமார் 15 ஆண்டுகள் திட்டப்பணி மேலாளர் பொறுப்பில் பணியாற்றியவர்.

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருந்து கொஞ்ச நாள் ஓய்வெடுக்கும் பொருட்டு முடிவு செய்த லாரா டர்னர் ஒரு நாள் ஃபேசியல் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதுவே அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிர்பாராத சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கிங்ஸ்டன் சாலையில் அமைந்துள்ள RHealthB என்ற சலூனிற்கு சென்றுள்ளார். வெறும் அடிப்படையான ஃபேசியல் செய்துகொள்ள வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்துள்ளது. ஆனால் அவருக்கு galvanic facial சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

London

அத்துடன் அந்த சிகிச்சையின் ஒருபகுதியாக முகத்தில் மின்சாரமும் பயன்படுத்தப்படும் என்பதை அவருக்கு விளக்கவில்லை என்றே கூறப்படுகிறது. சில நிமிட சிகிச்சைக்கு பிறகு லாராவின் பற்களில் வலி தொடங்கியதுடன், வாய்க்குள் ஒருவித எரியும் உணர்வு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல் வலி காரணமாக தூக்கம் இல்லாமல் போனது. அதன் பின்னர் படிப்படியாக மன அழுத்தம், தீவிர சிகிச்சை என அந்த ஒற்றை முடிவு அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியதுடன், சொந்த பிள்ளைகளுக்கு விஷம் அளித்ததாக சந்தேகத்தின் பேரில் கைதும் செய்யப்பட்டுள்ளார். தற்போது தாம் அனுபவித்த அந்த நெருக்கடியான சூழலை பத்திரிகை ஒன்றில் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

From around the web