கொரோனா தடுப்பூசி.. கண்டுபிடித்த விஞ்ஞானி மரம் மரணம்.. வீட்டில் சடலமாக மீட்பு!! ரஷ்யாவில் பகீர் சம்பவம்!

 
Russia

ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த குழுவில் இடம்பெற்றிருந்த அறிவியல் விஞ்ஞானி மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரசால் உலகம் முழுவதும் சுமார் 68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக நல்ல பயனை தந்தது. ரஷிய அரசு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கண்டுபிடித்தது. 

இந்த நிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியாவை சேர்ந்த 18 அறிவியல் விஞ்ஞானிகள் கடந்த 2020-ம் ஆண்டு கண்டுபிடித்தனர். 18 பேர் கொண்ட அந்த அறிவியல் விஞ்ஞானிகள் குழுவில் அண்டிரு பொட்டிக்வ் (47) என்ற விஞ்ஞானி இடம்பெற்றிருந்தார். 

murder

இந்நிலையில், ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த குழுவில் இடம்பெற்றிருந்த அறிவியல் விஞ்ஞானி அண்டிரு இன்று அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துகிடந்தார். பெல்ட்டால் கழுத்தை நெரித்து அண்டிரு கொலை செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அண்டிருவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் வாக்குவாதத்தின்போது அண்டிருவை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக 29 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Russian police

வைரஸ் குறித்த ஆராய்ச்சியாளரான அண்டிரு கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக அவருடன் சேர்ந்து மொத்தம் 18 அறிவியல் விஞ்ஞானிகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு ரஷிய அதிபர் புதின் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web