தொடர் கனமழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் இந்தோனேசியா.. 37 பேர் பலி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 37 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
The death toll from the flash floods in three areas of West Sumatra on Saturday night has risen to 27 people as of Sunday at 14:30 WIB according to the Regional Disaster Management Agency (BPDP) pic.twitter.com/J5Cb3msv3Q
— Volcaholic 🌋 (@volcaholic1) May 12, 2024
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பலரை காணவில்லை என்று அந்த நாட்டின் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.