பயங்கரவாதிகளுடன் மோதல்.. 54 உகாண்டா பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு... சோமாலியாவில் பரபரப்பு

 
Somalia

சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உகாண்டாவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 54 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. 

Somalia

இந்நிலையில் சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 54 உகாண்டா வீரர்கள் பலியானார்கள்.

இது தொடர்பாக உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி கூறுகையில், சோமாலியாவில் உள்ள ராணுவ தளத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்தனர். எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றனர்.

Somalia

இதற்கிடையே ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

From around the web