கொரோனாவை உயிரி ஆயுதமாக மாற்றிய சீனா.. உகான் ஆராய்ச்சியாளர் பகீர் குற்றச்சாட்டு!!

 
china

மக்கள் மத்தியில் வேண்டுமென்றே நோயை பரப்புவதற்காக சீனா தான் கொரோனா வைரஸை உயிரி ஆயுதமாக பயன்படுத்தியதாக உகான் ஆய்வாளர் சாவோ ஷாவோ பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

சீனாவின் உகானில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், பின் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி மனிதக்குலத்தையே ஆட்டம் காணச் செய்தது. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இப்படி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது. வளர்ந்த நாடுகள் தொடங்கி பின் தங்கிய நாடுகள் வரை எதுவும் இதற்கு தப்பவில்லை.

New-research-points-to-Wuhan-market-as-Covid-pandemic

இந்த வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் சந்தேகம் தெரிவித்திருந்த நிலையில், உகானைச் சேர்ந்த வைரஸ் ஆய்வாளரான சாவோ ஷாவோ அதனை உறுதிபடுத்தும் வகையில் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், உகான் வைரஸ் நிறுவனத்தில் தான் பணியாற்றியபோது, தனது மேல் அதிகாரிகள் சிலர், நான்கு வைரஸ் மாதிரிகளை தன்னிடம் வழங்கியதாகவும், அதில் அதிக வீரியமான மற்றும் வேகமாக பரவக்கூடிய திறன் கொண்ட வைரசை கண்டறியுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

Corona China

2019-ல் ஊகானில் நடைபெற்ற உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகளின் போது, தனது சக ஆராய்ச்சியாளர்கள், தடகள வீரர்களின் அறைகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டதாகவும், வைரஸை வீரர்களிடம் பரப்புவதற்காகவே அவர்கள் அங்கு அனுப்பப்பட்டதாகவும் சாவோ ஷாவோ கூறியுள்ளார்.

2019ம் ஆண்டுக்கு பிறகு ஏராளமான ஆய்வாளர்கள் காணாமல் போய்விட்டதாக கூறிய சாவோ ஷாவோ, 2020ம் ஆண்டு சின்ஜியாங் பகுதியில் உய்குர் சமூக மக்கள் வசித்த பகுதிகளிலும் நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

From around the web