இலங்கையில் கார் பந்தய விபத்து.. 7 பேர் பலி.. அதிர்ச்சி வீடியோ!

 
Srilanka

இலங்கையில் நடந்த கார் பந்தயப் போட்டியின் போது, பார்வையாளர்கள் மீது கார் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் ஊவா மாகாணம் பதுளை மாவட்டம் தியத்தலா பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. மலைப்பகுதியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் அங்கு திரண்டிருந்தனர். பந்தயகளத்தில் கார்கள் சீறிப்பாய்ந்தன.

அப்போது, ஒரு கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதையடுத்து, அருகில் இருந்த பார்வையாளர்கள் ஓடி சென்று காரில் சிக்கிய வீரரை வெளியே எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பந்தயத்தில் ஈடுபட்டிருந்த மற்ற கார்கள் வேகமாக வந்தன. அதில் ஒரு கார் பார்வையாளர்கள் நின்றுகொண்டிருந்த பகுதியில் அதிவேகமாக மோதியது.

Srilanka

இந்த கோர விபத்தில்  கார் பந்தயத்தை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து உடனடியாக கார் பந்தயம் நிறுத்தப்பட்டது.

விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


இந்த கார் பந்த போட்டி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உரிய பாதுகாப்பு வசதிகளின்றி இந்த போட்டியை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

From around the web