அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து மோதிய கார்.. ஒருவர் பலி.. பரபரப்பு வீடியோ!
அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில் செயின்ட் டேவிட் நார்த் ஆஸ்டின் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் அவசரகால அறைக்குள் கார் ஒன்று திடீரென புகுந்தது. அந்த அவசரகால அறையின் காத்திருப்பு அறையில் இருந்தவர்கள் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 3 முதியவர்கள் மற்றும் 2 இளைஞர்கள் என மொத்தம் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
காரை ஓட்டி வந்த பெண் மிச்செல்லே ஹாலேவே (57) என அடையாளம் காணப்பட்டார். அவர் காரிலேயே காயத்துடன் கிடந்துள்ளார். அவருக்கு உடனடியாக சி.பி.ஆர். சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.
US🇺🇸
— Izlamic Terrorist (@raviagrawal3) February 14, 2024
A car crashed into the emergency room of St. David's North Austin Medical Center in Austin, Texas, where about 11 patients were present. Several people were injured in the crash. pic.twitter.com/rvlK6sGxn7
அந்த மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து காரை நிறுத்த முற்பட்டனர். இதனால், பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது. இது உள்நோக்கம் கொண்டது இல்லை என வடக்கு ஆஸ்டின் போலீசார் தெரிவித்தனர். ஆஸ்டினில் நடப்பு ஆண்டில் நடந்த 7-வது கொடிய விபத்து சம்பவம் இதுவாகும். இதில் 7 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.