நாம கல்யாணம் பண்ணிக்கலாமா..? நாடாளுமன்றத்தில் காதலை கூறிய எம்.பி.. ஆஸ்திரேலியாவில் சுவாரஸ்யம்..

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர், தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்திய சுவராஸ்ய சம்பவம் அறங்கேறியுள்ளது.
நாடாளுமன்றத்தில் விவாதம், கேள்வி பதில், அமளி, வெளிநடப்பு என பரபரப்பான சூழலில் மாறாக அலுவல் நடவடிக்கையின் போது புரோபோசல் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உரையின் போதே, எம்.பி. ஒருவர் காதலியான சக எம்.பி.யை, திருமணம் செய்து கொள்ள விருப்ப அழைப்பு விடுத்துள்ள சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி.யான நாதன் லாம்பர்ட். இவர் வனம், எரிசக்தி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியுள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற கூடத்தொடர் நடைபெற்று வருகிறது. இவர், நாடாளுமன்றத்தில் சீரியஸாக உரையாற்றி கொண்டேயிருந்தார். அப்போது அவையில் அனைவரும் இவரது பேச்சை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தனர்.
அப்போது யாருமே எதிர்பாராத வகையில், தன்னுடைய காதலியான எம்பி நோவா எர்லிச்சை பார்த்து, “நாம 2 பேரும் கல்யாணம் செய்து கொள்ளலாமா? உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால், இப்போது மோதிரம் கொண்டு வரவில்லை. பின்னிரவில் குழந்தைகள் தூங்க சென்றதும், ரொமாண்ட்டிக்காக அதை கொண்டு வந்து தருகிறேன்” என்ற சொல்லி தன்னுடைய காதலையும் அன்பையும் வெளிப்படுத்தினார். இதை பார்த்ததுமே அங்கிருந்த அனைவருமே ஆச்சரியப்பட்டு போனார்கள்.. காதலை வெளிப்படுத்தியதுமே அந்த பெண் எம்பியும் திகைத்து நின்றார்.
பிறகு, நாடாளுமன்ற அவையில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி எம்பியின் காதலை உற்சாகப்படுத்தினார்கள். இதனால் நாடாளுமன்றமே சிறிது நேரம் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காணப்பட்டது. நாடாளுமன்றத்தில் பேசியதை தொடர்ந்து நாதன், லம்பேர்ட்டின் காதலை, அந்த பெண் எம்பி.யான நோவா எர்லிச்சும் ஏற்றுக் கொண்டுள்ளார். புதிய விக்டோரியன் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர் எம்பி. நாதன், வனம், எரிசக்தி காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியவரும்கூட, எப்படியாவது ஒருநாள் தன்னுடைய காதலை வித்தியாசமாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே திட்டு வந்துள்ளாராம் நாதன் லம்பேர்ட்.
Wedding bells. ALP Preston MP Nathan Lambert has used his inaugural speech in parliament to proposal to his partner… but he had no ring . @abcmelbourne #springst pic.twitter.com/TiKpaGRrge
— Richard Willingham (@rwillingham) March 7, 2023
ஆனால், இந்த கொரோனா பிரச்சனை நடுவில் வந்துவிடவும், எல்லா பிளான்களுமே சொதப்பலாகிவிட்டது. அதனால், கொரோனா முடிந்ததுமே இப்போது நாடாளுமன்றம் துவங்கி நடந்து வருவதால், இந்த முறை எப்படியாவது தன்னுடைய காதலை சக எம்.பியிடம் புரபோஸ் செய்துவிட வேண்டும் என்று நினைத்தாராம். இத்தனைக்கும், எம்பி நாதனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. நாடாளுமன்ற உறுப்பினரான ஒருவர் காதலியான சக நாடாளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ள சம்பவம் வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.