பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு.. 52 பேர் பலி.. 130 பேர் காயம்.. பகீர் வீடியோ!

 
Pakistan

பாகிஸ்தானில் மசூதி அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 52 பேர் உடல் சிதறி பரிதமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த இடத்தில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் 52 பேர் பலியாகி உள்ள நிலையில், 130-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சபடுகிறது.

Pakistan

பலுசிஸ்தானின் மாகாண நிர்வாகத்தின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களில் மஸ்துங்கின் டிஎஸ்பி நவாஸ் காஷ்கோரியும் ஒருவர் என்றார். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தேவைப்பட்டால், அவர்கள் கராச்சி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முழுப் பொறுப்பையும் அரசு ஏற்கும் என்றார்.

பலுசிஸ்தானின் தகவல் அமைச்சர் ஜான் அச்சக்சாய் கூறுகையில், பலுசிஸ்தானில் உள்ள மத இடங்களை குறிவைத்து நமது எதிரிகள் வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் அமைதியை சீர்குலைக்க விரும்புகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. பலுசிஸ்தானில் உள்ள அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பல தலைவர்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இதுவரை குண்டுவெடிப்புக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் தலிபான் (TTP) வெளியிட்ட அறிக்கையில் தங்களுக்கும், இந்த குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இல்லை என்று மறுத்ததுள்ளது.

From around the web