பிறந்தநாள் அணிவகுப்பு.. காதலை பரிமாறிக்கொண்ட காதல் ஜோடி.. வைரல் வீடியோ

 
England

இங்கிலாந்து மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு அணிவகுப்பு நிகழ்ந்துக்கொண்டிருக்கும் வேளையில், அரண்மனை காவலர் ஒருவரின் காதல் வீடியோ வைரலாகி வருகின்றது.

இங்கிலாந்தில் சார்லஸ் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு லண்டனில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்படும். ட்ரூப்பிங் தி கலர் எனப்படும் இந்த விழாவின்போது, அரண்மனையின் பால்கனியில் ராஜ குடும்பத்தினர் தோன்றும்போது, கீழே ராணுவ வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெறும்.

England

இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில், நடந்த சுவாரஸ்யமான பல புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் பிரபலமாகின. அதில் அரண்மனை காவலர் ஒருவரின் காதல் வீடியோ மிகவும் வைரலானது.

அரண்மனையின் முதன்மை வாசல் அருகே, ராணுவ அணிவகுப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, காவலர் தனது காதலியை கட்டிப்பிடித்து வழியனுப்புகிறார். அப்போது ஒரு மோதிரத்தையும் அவளுக்கு அணிவித்து காதலை வெளிப்படுத்துகிறார். உடனே காதலி மீண்டும் அவரை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார்.


பின்னர் அரண்மனை வாசலை கடந்து செல்ல இளம்பெண் ஓடும்போது மீண்டும் ஒருமுறை அவர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டு விடைபெறுகிறார்கள். கடமைக்கு இடையே காதலில் நெகிழ்ந்த இந்த ஜோடியின் வீடியோக்கள் வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டது.

From around the web