கடலில் நொறுங்கி விழுந்த ஆஸ்திரேலிய ராணுவ ஹெலிகாப்டர்.. 4 வீரர்கள் மாயம்!

 
Australia

ஆஸ்திரேலியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ராணுவ  இடையே நேற்று (ஜூலை 28) இரவு லிண்டெமன் தீவில் இடம்பெற்ற பயிற்சியின் போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Australia

தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்ற நிலையில், 4 விமானக் குழுவினர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இன்று (ஜூலை 29) காலை இடம்பெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

அப்போது, ஆஸ்திரேலியாவின் சிவில் படையினர், காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் அமெரிக்க நண்பர்கள் என பலரும் இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது பூரண ஒத்துழைப்பை வழங்கியதாகவும், அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Helicopter

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான மிகப்பெரிய இருதரப்பு ராணுவப் பயிற்சியான தலிஸ்மான் சப்ரி பயிற்சியின் ஒரு பகுதியாக நிகழ்ந்த பயிற்சியின் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

From around the web