மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 25 பேர் பலி.. நைஜீரியாவில் அதிர்ச்சி சம்பவம்

 
NIgeria

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 25 பேர் பலி.. நைஜீரியாவில் அதிர்ச்சி சம்பவம்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த கோகி மாகாணத்தில் ஓமலா பகுதியில் அகோஜிஜு-ஓடோ சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.  இந்த நிலையில், ஆயுதமேந்திய மர்ம நபர்கள் திடீரென அந்த சமூக மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் புகுந்து அதிரடியாக எல்லோரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

Dead Body

இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் கயமடைந்து உள்ளனர். இதுகுறித்து சமூக தலைவரான எலியாஸ் அடாபோர் கூறும்போது, சமீபத்தில் இந்த பகுதியில் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன.  

Gun

இதில், குழந்தைகள் உள்பட பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்து வேறு எந்தவித தாக்குதல்களும் வருங்காலத்தில் நடந்து விட கூடாது என்பதற்காக, அந்த பகுதியில் கூடுதலான படைகளை அரசு நிறுத்தியுள்ளது.

From around the web