மர்ம நபர் நடத்திய தொடர் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு!

 
Maine

அமெரிக்காவில் நேற்று நடந்த தொடர் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை துப்பாக்கி சூட்டுக்கு பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Gun

இந்த நிலையில், அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து ஆன்டிராஸ்காகின் கவுன்டியின் ஷெரீப் அலுவலகம் 2 புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது. அதில் சந்தேகத்திற்குரிய மர்ம நபர் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி, சுடுவதற்கு தயாராக இருக்கும் காட்சி இடம் பெற்றிருக்கிறது. அந்நபர் சம்பவத்திற்கு பின் தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Maine

அந்த மர்ம நபரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள், அடையாளம் காட்டும்படி பொதுமக்களிடம் ஷெரீப் கேட்டு கொண்டுள்ளார். நகரின் பல்வேறு இடங்களில் அதிக அளவிலான துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன என கூறப்படுகிறது.  இதுபற்றிய தகவல் கிடைக்க பெற்றதும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி போலீசார் நேற்றிரவு அறிவுறுத்தி உள்ளனர்.

From around the web