கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 12 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி.. புருண்டியில் பயங்கரம்!

 
burundi

புருண்டியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 12 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவின் புருண்டி அருகே காங்கோ அமைந்துள்ளது. இதனிடையே, புருண்டி நாட்டில் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், அண்டை நாடான காங்கோவை தலைமையிடமாக கொண்டு ரெட்-தபரா என்ற கிளர்ச்சிக்குழு புருண்டி நாட்டிற்குள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், புருண்டி நாட்டின் லேக் தங்ஹங்கியா நகரில் உள்ள விஹுஜி என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 12 குழந்தைகள் உள்பட  20 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ரெட்-தபரா கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.

dead-body

கிழக்கு காங்கோவின் தெற்கு கிவுவை தளமாகக் கொண்ட புருண்டிய ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுவான ரெட்-தபரா, எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை என மறுத்துள்ள இந்த குழு, 9 ராணுவ வீரர்களையும், ஒரு போலீஸ் அதிகாரியையும் கொன்றதாக கூறியுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் புருண்டி இராணுவ சீருடை அணிந்திருந்ததாகத் தெரிகிறது என்று அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் பேசிய சாட்சிகள் தெரிவித்தனர். “எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் நிலையத்தை அவர்கள் தாக்கியபோது தான் அவர்கள் போராட்டக்காரர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தோம்” என்று விவசாயி பிரிசிலே கன்யாங்கே கூறினார். “இங்குள்ள பலர் தப்பி ஓட முயன்று தோட்டாக்களால் காயமடைந்தனர்.”

Burundi

தாக்குதலை நேரில் பார்த்த விவசாயி இன்னசென்ட் ஹஜயாண்டி கூறுகையில், “பொதுமக்களை நிர்கதியாக விட்டுவிட்டு பாதுகாப்புப் படையினர் தப்பி ஓடிவிட்டனர்” என்றார். துப்பாக்கிச் சூட்டில் இரு கால்களிலும் காயமடைந்த மளிகைக் கடை உரிமையாளரான ஆண்ட்ரே கபுரா கூறுகையில், இராணுவமும் காவல்துறையும் மீண்டும் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தியவர்களைத் தடுப்பதில் மெத்தனமாக உள்ளன என்றார்.

வெள்ளியன்று, புருண்டிய ஜனாதிபதி எவரிஸ்டே நடாயிஷிமியே இராணுவம், காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்,

From around the web