வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் பலி.. பிலிப்பைன்சில் சோகம்!
பிலிப்பைன்ஸ் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில் சீனாடவுன் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாக கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள உணவகத்தில் பற்றிய தீ மளமளவென கட்டிடத்தின் மேல் பகுதிக்கும் பரவியது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பற்றி எரிந்த தீயை அணைந்தனர். எனினும், இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் 11 பேர் உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
At least 11 people have died in the Philippines after a fire broke out at a five-story building in Manila's Chinatown. The blaze was doused about three hours after fire responders were alerted at around 7.30 AM. The cause of the fire is still unclear. pic.twitter.com/BIwZEkCmpr
— Our World (@MeetOurWorld) August 2, 2024
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடியிருப்பு, கிடங்குக் கட்டடத்தில் மூண்ட தீயில் 16 பேர் உயிரிழந்தனர். அதேபோல் 2017-ல் தாவோ சிட்டி கடைத்தொகுதியில் மூண்ட தீயில் பாதுகாவல் அதிகாரி உட்பட 37 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.