தரையிறங்கினார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்!!
Mar 19, 2025, 05:17 IST

பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக பணியாற்றி வந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக தரையிறங்கினார்.
எலான் மஸ்க் கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் விண்கலம் விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரர்களை பத்திரமாக கொண்டு வந்துள்ளது. கடலில் விழுந்து ட்ராகன் விண்கலத்தை படகு மூலம் கப்பலுக்கு இழுத்து வந்தனர். பின்னர் விண்கலத்திலிருந்து இறங்கிய சுனிதா வில்லியம்ஸை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
முன்னதாக விண்வெளிக்குச் சென்ற விண்கலம் பழுது பட்டதால், சுனிதா வில்லியம்ஸ் குறிப்பிட்ட காலத்திற்குள் தரையிறங்க முடியவில்லை. இதற்கு முந்தைய பைடன் அரசு தான் காரணம் என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டியிருந்தார்.