இந்தியாவுக்காகவா ஆப்பிள் நிறுவனம் நடத்துகிறீர்கள்? அதிபர் ட்ரம்ப் கடும் அதிருப்தி!!

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கடும் வரி விதித்த அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கையைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு அதற்கு ஈடான வரி விதித்தது. இருநாடுகளின் வரி விதிப்பினால், ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மாற்றும் முடிவில் உள்ளது. மேலும் கூடுதல் முதலீடுகள் செய்யவும் முடிவு செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை விமர்சித்து அதிபர் ட்ரம்ப் அதிருப்தியை தெரிவித்துள்ளார். கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ட்ரம்ப்,” உலகிலேயே அதிக வரி வசூலிக்கும் நாடாக இந்தியா உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் ஐ நான் நன்றாகக் கவனித்துக் கொள்கிறேன். ஆனால் அவர் இந்தியாவில் முதலிடு செய்யப்போகிறேன் என்கிறார். இது எனக்கு விருப்பமானதாக இல்லை.
இந்தியாவில் அவர்களே அவர்களை கவனித்துகொள்வார்கள். இந்தியா நலனுக்காக நீங்கள் செயல்பட வேண்டும் என்றால் அங்கே தொழிற்சாலை அமையுங்கள்” என்று பேசியுள்ளார்.
இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்திற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் அதிபர் ட்ரம்ப். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஐஃபோன் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனப் பொருட்களுக்கு அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி விதித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.