லிபியாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து.. 7 பேர் பரிதாப பலி!

 
Libya

லிபியாவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட ஆப்பிரிக்காவில் மத்திய தரைகடல் பகுதியில் உள்ள நாடான லிபியா லிபிய தலைநகர் திரிபோலிக்கு மேற்கே உள்ள ஜான்சூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தங்கியிருந்து வந்தனர்.

Dead Body

நேற்றிரவு அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிடம் இடிந்ததில், தூங்கிக்கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

Libya

எனினும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். அவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டிட விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

From around the web