அமெரிக்கா ஆர்க்டிக் பகுதியில் ஏற்பட்ட பனி வெடிப்பு.. 14 கோடி மக்கள் தவிப்பு!

 
USA

அமெரிக்காவில் ஆர்க்டிக் பனி வெடிப்பு காரணமாக 14 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுங் குளிரால் தவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் ஆர்க்டிக் பனி வெடிப்பு காரணமாக வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இதனால், நாட்டில் உள்ள 14 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுங் குளிரால் தவித்து வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், பல மாகாணங்களில் பல நகரங்கள் உறைந்துபோயுள்ளன.

USA

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும், அத்தியாவசியப் பயணம் மேற்கொள்வோர் பாதுகாப்புடன் பயணத்தை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பநிலை மைனஸ் 30 டிகிரி அளவுக்குக் குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆயிரத்து 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

11 ஆயிரத்துக்கும் அதிகமான விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web