விமான எஞ்சினுக்குள் இழுக்கப்பட்டு விமான நிலைய ஊழியர்.. உடல் சிதைந்து பரிதாப மரணம்!!

 
Texas

நின்று கொண்டிருந்த விமானத்தின் எஞ்சினுக்குள் இழுக்கப்பட்ட விமான நிலைய பணியாளர் ஒருவர் உடல் சிதைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ நகருக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. விமானம் சாண்டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான ஓடுதளத்தில் விமானம் மெல்ல சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தின் ஒரு எஞ்சின் இயங்கிக் கொண்டிருந்தது.

ENgine

அப்போது, தரையிறங்கிய விமானம் அருகே விமான நிலைய ஊழியர் ஒருவர் வந்துள்ளார். விமானத்தின் ஒற்றை எஞ்சின் இயங்கி வந்த நிலையில் திடீரென அந்த ஊழியர் விமான எஞ்சினுக்குள் இழுக்கப்பட்டார்.

விமான எஞ்சினில் இருந்து வந்த அதிக அழுத்தத்தால் அந்த ஊழியர் விமான எஞ்சினுக்குள் இழுத்துக் கொள்ளப்பட்டார். விமான எஞ்சினில் சிக்கிய அந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்துள்ளார்.

Texas

இதனை தொடர்ந்து அந்த நபரின் உடலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தின் எஞ்சின் இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அதன் அருகே சென்றதால் விமான ஊழியர் எஞ்சின் அழுத்தத்தால் அதனுக்குள் இழுத்துக்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web