8 வயது சிறுவன் பலி.. Strawberry பழத்தால் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.. கதறிய பெற்றோர்!

 
Strawberries

அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் மேடிசன்வில்லே நகரில் உள்ள பள்ளியில் நிதி திரட்டும் பொருட்டு 8 வயது சிறுவன் ஸ்ட்ராபெர்ரி பழங்களை அதிகமாக உண்டுள்ளான். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தூக்கத்தில் இருந்த சிறுவனை எழுப்பிய பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்த அந்த பெற்றோர், சிறுவன் ஒவ்வாமை அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவனுக்கு பொனட்ரில் அளித்துள்ளதாகவும், குளிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

boy-dead-body

இருப்பினும் எந்த மாற்றமும் தென்படாததுடன், நிலைமை மோசமடைய, இரவு 10.30 மணியளவில் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சில மணி நேரத்திற்கு பின்னர், வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையிலேயே வெள்ளிக்கிழமை பகல் பள்ளிக்கு அனுப்பும் பொருட்டு தூக்கத்தில் இருந்த சிறுவனை பெற்றோர் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களே சிறுவன் மரணமடைந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

Kentucky PS

இதையடுத்து போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வெளியான பிரேத பரிசோதனை ஆய்வில், சிறுவன் ஒவ்வாமை காரணமாகவே மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

From around the web