டொனால்ட் ட்ரம்ப் பக்கம் சாயும் அமெரிக்கப் பெரும் பணக்காரர்கள்!! கட்சி மாறுகிறார்களா?

 
கணிப்புகளைப் பொய்யாக்கி 45வது அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவின் முக்கியமான பெரும் பணக்காரர்களான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் மற்றும் ஓப்பன் ஏ.ஐ நிறுவனர் சாம் அல்ட்மேன் ஆகிய மூவரும் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்க ட்ரம்ப் உடன் இணக்கமாகச் செல்ல முடிவு செய்துள்ளனர்.

அடுத்த நான்கு ஆண்டுகள் அமெரிக்காவின் திட்டங்கள், சட்டத்திருத்தங்கள் எல்லாமும் மீண்டும் அதிபராகப் போகும் ட்ரம்ப் கையில் தான் இருக்கிறது. அவருடைய ஒற்றைக் கையெழுத்து சில முக்கிய நிறுவனங்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கக் கூடியவை. 

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தீவிர ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராக அறியப்பட்டவர். அக்கட்சிக்கு தேர்தல் நிதி அதிகளவில் அளித்தவர்களில் ஒருவரும் ஆவார். மேலும் டொனால்ட் ட்ரம்ப் க்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க்க்கும் ட்ரம்ப் க்கும் சுமூகமான  உறவு இருந்ததில்லை ர். மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தளங்கள் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களின் கருத்துக்களை சென்சார் செய்வதாக குற்றம் சுமத்தியிருக்கிறார். அதிபர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ட்ரம்ப்-ஐ அவருடயை இல்லத்தில் சந்தித்துப் பேசினார் மார்க் சக்கர்பர்க்.

ஓப்பன் ஏ.ஐ நிறுவனர் சாம் அல்ட்மேன் சமீபத்தில் தான் ஜனநாயகக் கட்சி அரசில் பணியாற்றிய முக்கிய நிர்வாகிகளை தனது நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துள்ளார். இது ட்ரம்ப் க்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் இந்த் மூன்று பெரும் பணக்காரத் தொழிலதிபர்களும், ஜனவரி மாதம் நடைபெற உள்ள ட்ரம்ப்-ன் பதவியேற்பு விழாவுக்கு தலா 1 மில்லியன் டாலர்கள் நன்கொடை கொடுக்க உள்ளார்கள். அதிபர் ட்ரம்ப்புடன் சுமூகமான உறவைப் பேணுவதற்கான தொடக்கமாக இது கருதப்படுகிறது. ஜெப் ஃபெசோஸும்  அடுத்தவாரம் ட்ரம்ப் - ஐ சந்தித்துப் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்த 4 ஆண்டுகளில் ஏ.ஐ ( செயற்கை நுண்ணறிவு) துறைக்கு மிகவும் முக்கியமான காலமாக இருக்கும். அதிபர் ட்ரம்ப் இந்தத் துறை வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் சாம் அல்ட்மேன் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மூன்று முக்கிய பணக்கார தொழிலதிபர்கள் தங்கள் ஆதரவை ட்ரம்ப் பக்கம் திருப்பி உள்ளது அமெரிக்க அரசியலில் மிகவும் உற்று நோக்கிப் பார்க்கப்படுகிறது.

From around the web