அமெரிக்காவின் மிகவும் வயதான பெண் உயிரிழந்தார்.. அவர் கொடுத்த வாழ்க்கை குறிப்பு

அமெரிக்காவில் வாழும் மிகவும் வயதான நபருரான எலிசபெத் பிரான்சிஸ் தனது 115 வயதில் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் வசித்து வந்தவர் எலிசபெத் பிரான்சிஸ். 1909-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி லூசியானாவில் எலிசபெத் பிரான்சிஸ் பிறந்தார். முதலாம் உலகப் போரில் இருந்து டைட்டானிக் கப்பல் மூழ்கும் வரை அனைத்தையும் அவர் நன்கு அறிந்திருந்தார். ஹூஸ்டனில் ஒரு காபி கடையை நடத்தி வந்தார். இவர் வாகனம் ஓட்டுவதை விட நடைபயிற்சி செய்வதை விரும்பினார். இதுவரை அவர் அமெரிக்காவில் 20 அதிபர்களின் ஆட்சியை கண்டுள்ளார்.
இந்த ஆண்டின் முற்பகுதியில் தனது 115-வது பிறந்தநாளில் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்த குறிப்பை பிரான்சிஸ் வழங்கி உள்ளார்.
முந்தைய நீண்ட ஆயுட்கால சாதனையாளரான எடி செக்கரெல்லி கலிபோர்னியாவில் தனது 116-வது பிறந்தநாளுக்கு சில வாரங்களுக்குப் பிறகு இறந்ததை அடுத்து, எலிசபெத் பிரான்சிஸ் இந்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டின் வயதான நபராக முடிசூட்டப்பட்டார். ஏப்ரல் மாதம், LongeviQuest-ல் இருந்து அமெரிக்காவில் மிகவும் வயதான நபராக அங்கீகரிக்கும் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இப்போது, அமெரிக்காவின் மிக வயதான நபர் நவோமி வைட்ஹெட் ஆவார். அவர் செப்டம்பர் 26, 1910-ல் பிறந்தார் என்று LongeviQuest தெரிவித்துள்ளது.