அமெரிக்காவின் அதானி? எலான் மஸ்க் க்கு கடும் எதிர்ப்பு!!

வெள்ளை மாளிகையில் அதிபர் அலுவலகத்தில் செய்தியாளர்களை அதிபர் ட்ரம்ப் உடன் சந்தித்தார் எலான் மஸ்க். அப்போது அவருடைய மகன் எக்ஸ் ஐயும் உடன் அழைத்து வந்தார். இது அதிபர் அலுவலகத்தை மதிக்காத செயல் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முக்கியமான செய்தியாளார் சந்திப்புக்கு செல்பவர் உடன் 4 வயது மகனை அழைத்து வருவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மகனை அழைத்து வந்து, நான் என்ன வேணும்னாலும் செய்ய முடியும் என்ற தன்னுடைய அதிகாரத்தைக் காட்டுகிறார் எலான் மஸ்க்.
மேலும் அங்கே அதிமாகப் பேசியது மஸ்க் தான். அதிபர் ட்ரம்ப் வெறுமனே உட்கார்ந்து கொண்டு ஒரு சில கருத்துக்களை மட்டுமே சொன்னார். இது அதிபரை அவமதிக்கும் செயல். ட்ரம்ப் ஏன் எலான் மஸ்க் -க்கு இவ்வளவு இடம் கொடுத்துள்ளார். எலான் மஸ்க்-ன் பணம் ட்ரம்ப்-க்கு தேவைப்படுகிறதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
4வயது மகனை அழைத்து வந்தது தவறு என்பவர்கள், அந்த சிறுவன் அதிபர் ட்ரம்ப்பிடம் செல்ல முயன்ற போது முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்ட அதிபர் ட்ரம்ப்-ஐயும் விமர்சித்துள்ளனர். அமெரிக்காவின் எந்த ஒரு அதிபரும் இப்படி நடந்து கொண்டனரா? ஒரு சிறுவன் தன்னிடம் வரும் போது அவரை அரவணைக்கக்கூட செய்யாத அதிபர், அமெரிக்காவின் குழந்தைகளின் உணவு மீது கை வைத்துள்ளார். எலான் மஸ்க்கும் சேர்ந்து குழந்தைகளுக்கான உணவு திட்டத்தை ரத்து செய்துள்ளனர் என்றும் விமர்சித்துள்ளனர்.
மேலும், அரசுத்துறையிலிருந்து ஒருவருக்கு கூட தவறான வகையில் சம்பளம் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. ஆனால் எலான் மஸ்க் பொய் சொல்லுகிறார் என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மொத்தத்தில், எலான் மஸ்க் சொல்றார் ட்ரம்ப் செய்யுறார் என்ற ரீதியில் அமெரிக்க அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆக, இந்தியாவில் ஒரு அதானி என்றால் அமெரிக்காவில் ஒரு எலான் மஸ்க் ஆ?