சோதனையை சாதனையாக மாற்றிய அமெரிக்க பெண்.. நீளமான தாடி வளர்த்து கின்னஸ் சாதனை..!

 
Erin Honeycutt

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், உலகின் மிக நீளமான தாடி உடைய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆண்கள் தாடி வளர்ப்பது பொதுவானது. அதே நேரம் பெண்கள் முகத்தில் மீசை வளர்ந்தால் சங்கடப்படுவார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர் எரின் ஹனிகட் (38). இவருக்கு ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து பெண்களின் அதிகப்படியான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.

இதன் காரணமாக எரின் ஹனிகட் 11.8 அங்குல நீளமான தாடியை வளர்த்து குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளார். ஹனிகட் சமூக விதிமுறைகளையும் பல சவால்களையும் மீறி நீளமான பெண் தாடிக்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றார்.

Erin Honeycutt

தனது இந்த பயணம் ஒரு பெரும் போராட்டமாக இருந்தது என எரின் ஹனிகட் கூறியுள்ளார். 13 வயதில் ஒரு நாளைக்கு மூன்று முறை வரை ஷேவிங் மற்றும் வேக்சிங் போன்ற முறைகளை முயற்சி செய்து, தனது தாடியை நிர்வகிக்கும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளார். இருப்பினும், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஒரு பகுதியளவு கண் பார்வையை இழந்த பிறகு, இந்த முயற்சிகளை நிறுத்திவிட்டு இயற்கையாகவே தாடியை வளர்க்க முடிவு செய்தார் ஹனிகட்.

கடந்த பிப்ரவரி 8-ம் தேதி, ஹனிகட் அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார். 11.8 அங்குல தாடி வளர்ச்சியை தனது அடையாளமாக மாற்றினார். இது 10 அங்குல தாடியை வளர்த்த 75 வயதான விவியன் வீலரின் என்ற மூதாட்டியின் முந்தைய சாதனையை முறியடித்தது. இருப்பினும், ஹனிகட்டின் பயணம் பல பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளது. ஏனெனில் பாக்டீரியா தொற்று காரணமாக ஹனிகட்டின் கால் துண்டிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வெளித்தோற்றத்தில் சமாளிக்க முடியாத சவால்களை எதிர்கொண்டாலும், ஹனிகட் வாழ்க்கையில் நேர்மறையான கண்ணோட்டத்தை நோக்குகிறார். தன் அன்புக்குரியவர்களின் அசைக்க முடியாத ஆதரவே தன் நெகிழ்ச்சி மற்றும் நம்பிக்கைக்குக் காரணம் எனக் கூறுகிறார் ஹனிகட். ஹனிகட் இப்போது பெருமையுடன் தன் தாடியை வளர்த்து வருகிறார். அதை அவமானத்திற்கு பதிலாக வலிமையின் சின்னமாக கருதுகிறார் ஹனிகட்.

From around the web